மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தல திருவிழா இறுதிநாள் திருப்பலி

Report Print Rusath in மதம்
66Shares

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித திருத்தலமான சதா சகாய மாதா திருத்தல திருவிழா கடந்த ஆகஸ்ட் 28 ஆந்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட ஆராதனையும் திருவிழா இறுதிநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இனிதே நிறைவுபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் 150 வருடங்கள் தொண்மை வாய்ந்த சதா சகாய மாதா ஆலயம் புகழ்பெற்ற திருத்தலமாகும். அரசாங்க வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்பட்ட இத்திருத்தலத்தில் வருடாந்த திருவிழா அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்று வருகின்றது.

தீராத நோய்கள் குணமடைதல், குழந்தை பாக்கயமற்றவர்கள் குழந்தை வரத்தினைப் பெற்றுக்கொள்ளல் போன்ற காரணங்களுக்காக அடியார்கள் நேர்ச்சை வைத்து இத்திருத்தலத்திற்கு பாதை யாத்திரை மேற்கொண்டு நம்பிக்கை வைத்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் வவுனதீவு பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபை, நீர்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பாதுகாப்புப் பிரிவு, சாரணிய இயக்கம் மற்றும் சமுக அமைப்புக்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்து இத்திருவிழாவிற்கு பங்களிப்பு நல்கியிருந்தனர்.