வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தேர் பவணியில் இரு தேர்கள் கோலாகலமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
தேரோட்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதும் தான்தோன்றீஸ்வரம் என்று குறிப்பிடப்படுவதும் கொக்கட்டிச்சோலை பதியேயாகும்.
இதன்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியவாறு திருவிழாவில் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பதும் நோக்கத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரிவுகள் ஏற்பாடு செய்துள்ளது.