மாறுபடுகின்ற உலகில் எப்படி மனிதனாக வாழ்வது? இறை வழிபாடு தொடர்பில் விளக்கம்

Report Print Sinan in மதம்

மனித வாழ்விலே இறைவழிபாடு என்பது இரண்டர பின்னி பிணைந்திருக்கிறது. இந்த நிலையில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு நாம் இறை வழிபாடு செய்வது அவசியமாகிறது.

ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்வில் நல்ல பண்புகளை, இறை அருளோடு கூடிய நல்ல வாழ்வை, இறை இன்பதை பெறுவதற்கும் அன்றாடம் இறை வழிபாடுகளை செய்ய வேண்டும்.

ஆலயங்களில் சென்று இறை வழிபாடுகளில் ஈடுபடும் போது நம்முடைய மனம், ஆடை போன்றவை எப்போதுமே தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் இறை அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.

ஏனெனில் நமது உள்ளம் சுத்தமாக, புனிதமாக இருக்கும் போது தான் அங்கு இறைவன் வந்து குடியிருப்பாராம். இதனால் தான் நமது முன்னோர்கள் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என அடிக்கடி கூறுவார்கள்.

அந்தவகையில் பாரம்பரியங்களை பாதுகாக்கவும், கலாச்சார நிகழ்வுகளை நினைவுப்படுத்தவும் மாறுபடுகின்ற உலகில் மனிதனாக வாழ மற்றும் பல புதிய வடிவமைப்புகளுடன் வாரந்தோறும் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் நெஞ்சங்களை தொட்டுச்செல்லும் ஆன்மீக அருளுரை உங்களை நாடி வரவுள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் ஆன்மீக அருளுரை நிகழ்ச்சியில் இறை வழிபாடு இடம்பிடித்துள்ளது.