வவுனியா நகர் எங்கும் பறக்க விடப்பட்டுள்ள நந்திக்கொடிகள்

Report Print Thileepan Thileepan in மதம்
288Shares

வவுனியா நகரம் முழுவதும் இந்து மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி நந்திக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளைய தினம் வவுனியாவில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டே இந்து மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நந்திக்கொடிகள் வவுனியா நகரெங்கும் பறக்க விடப்பட்டுள்ளன.

இப்பேரணியானது நாளைய தினம் காலை 08.00 மணியளவில் வவுனியா - குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று அங்கிருந்து ஏ9 விதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை அடைந்து அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில் ஊர்வலம் நிறைவடையவுள்ளது.

வடக்கின் வாசலாக கருதப்படும் வவுனியா மண்ணில் இந்து சமயத்தினர் இச்செயற்பாடு சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.