கொரோனா தொற்றிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடுகள்

Report Print Suman Suman in மதம்
63Shares

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியில் உள்ள மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ் விசேட வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் புனித திரேசாள் தேவாலயத்தில் இவ் விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடு கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் யாக பூசை ஒன்றும், கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள தும்மினி விகாரையில் பிரித் வழிபாடும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.