வவுனியாவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி வழிபாடுகள் ஆலயங்களில் இடம்பெற்றுள்ளன.
சுகாதார திணைக்களத்தின் பணிப்பின் பெயரில் குறிப்பிடத்தக்களவான பக்தர்கள் மாத்திரமே ஆலயத்தில் அனுமதிக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திலும் பிரதமகுரு க.கணேஸ் குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கெளரி விரத பூஜைகளும் இடம்பெற்றுள்ளன.