மட்டக்களப்பில் தீபாவளியை முன்னிட்டு விசேட வழிபாடுகள் முன்னெடுப்பு

Report Print Kumar in மதம்
77Shares

தீபத்திருநாளாம் தீபாவளியை இன்று இந்துக்கள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையுடனும் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையின் கீழும் நடைபெற்றுள்ளன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் தீபாவளி சிறப்பு பூஜை இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவு பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளின்போது நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் அழியவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சுகமடையவும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கலந்துகொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீப ஒளியில் சுகம்பெற்று வீடுதிரும்ப வேண்டும் என அங்கு ஆசியுரை தெரிவித்த ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.