வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று புதுவருட விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வவுனியா - பூவரசன்குளம் புனித அன்னாள் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காலை 6.30 மணிக்கு அருட்தந்தை ரெஜினோல் தலைமையில் இவ் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது குறைந்தளவிலான கிறிஸ்தவர்களே தேவாலயத்தினுள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை வவுனியாவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.