புதைக்கப்பட்ட வேற்றுக்கிரகவாசி..! சிக்கியது முக்கிய ஆதாரம்..!

Report Print Mawali Analan in விஞ்ஞானம்

பெரு நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் மூன்று விரல்களை கொண்ட கை ஒன்றின் எழும்பு சிதைவினை கண்டு பிடித்துள்ளனர்.

எந்தவகையிலும் மனித கையுடன் ஒத்துப்போகாத இந்த தோற்றம் நிச்சயமாக மனிதர்களுடையது அல்ல என்றே விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகின்றார்கள்.

அந்த வகையில் இது வேற்றுக் கிரகவாசியின் கையின் எழும்புப் பகுதி ஒன்று என்ற வகையில் நம்பி ஆய்வினை தொடர்ந்தவர்களுக்கு இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்துள்ளது.

அதுவே அந்த கையின் எழும்புப்பகுதியில் உலோகத்திலான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதும், குறித்த உலோகம் பூமிக்கு சொந்தம் இல்லாதது எனவும் கண்டு பிடித்துள்ளனர்.

பெரு நாட்டின் பாலைவனப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையிலேயே இந்த எழும்புக் கூடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படியாயின் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கலாச்சாரமாக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற நம்பிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த உடல் இறந்ததும் புதைக்கப்பட்டுள்ளது, அதேபோல் பூமிக்கு பொருத்தம் இல்லாத இந்த வேற்றுக்கிரக வாசிகளின் தாய்க் கிரகம் எது? என்ற ஆய்வுகளும் தொடரப்பட்டுள்ளது.

அதே போன்று பூமியில் தெய்வங்களாக வலம் வந்தவர்களும் வேற்றுக்கிரகவாசிகளா? அவர்களே பூமிக்கு தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுத்தார்களா? என்ற கேள்விக்கான விடையையும் கண்டுபிடிக்கும் வகையில் ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளன.

இப்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரம் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய ஆதாரம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments