வேற்று கிரகம் பற்றி நாசா இன்று முக்கிய அறிவிப்பு

Report Print Samy in விஞ்ஞானம்

சூரிய குடும்பத்திற்கு அப்பாலுள்ள வேற்று கிரகங்கள் பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இன்று புதன்கிழமை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது.

சூரியனுக்கு வெளியில் நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளையே நாசா இன்று அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதன்போது உயிர்வாழ சாத்தியம் கொண்ட வேற்றுக் கிரகங்கள் பற்றியும் நாசா முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி நாசா நடத்தும் ஊடகவியலாளர் மாநாடு நியூயோர்க் நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நாசா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இது நாசா தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

எனினும் அது வெளியிடவிருக்கும் அறிவிப்பு குறித்து எந்த ஒரு குறிப்பையும் தரவில்லை என்ற போதும் இந்த ஊடக மாநாட்டில் ஸ்பிட்சர் தொலைநோக்கி விஞ்ஞானிகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி வேற்று கிரகங்கள் குறித்து அவதானித்து வருகிறது.

ஸ்பிட்சர் தொலைநோக்கி 2015ல் இத்தாலியின் கலிலியோ தேசிய தொலைநோக்கியுடன் சேர்ந்து, பூமிக்கு மிக நெருங்கிய பாறை உலகம் ஒன்றை கண்டுபிடித்திருந்தது.

எச்.டி 219134பி என்ற அந்த கிரகத் பூமியில் இருந்து 21 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

எனினும் அந்த கிரகம் தனது நட்சத்திரத்தை நெருங்கி வலம் வருவதால் உயிர்வாழ சாத்தியமற்ற சூழல் நிலவுவது ஏமாற்றத்தை தந்தது.

Comments