எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடிக்கும் ஆபத்து! நில அதிர்வு ஏற்படவுள்ள நாடுகள்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in விஞ்ஞானம்
979Shares

சமகாலத்தில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் உலகம் முழுவதும் உள்ள எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இத்தாலி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அது எட்னா என்ற எரிமலை வெடித்து சிதறிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐஸ்லாந்தில் 4 எரிமலைகள், இந்தியாவில் பல வருடங்களாக அமைதியாக இருந்த எரிமலைகள் இவ்வாறு வெடித்து சிதற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

பூமியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்றமே இந்த நிலைமைக்கு காரணம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிமலைக்கு மேலதிகமாக உலகம் முழுவதும் நில அதிர்வு ஆபத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இயற்கை மாற்றங்கள் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் பூமியில் வாழும் மக்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சென்பிரான்ஸிஸ்கோ உட்பட பல நாடுகள் நில அதிர்விற்கு முகம் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறான பேரனர்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான மாற்று வழியொன்று இன்னமும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Comments