எவரஸ்ட் சிகரத்தை வட்டமிட்ட பறக்கும் தட்டு! கெமராவில் பதிவாகிய காட்சிகள்

Report Print Shalini in விஞ்ஞானம்
880Shares

எவரஸ்ட் சிகரத்தை சுற்றி விட்டமிட்ட பறக்கும் தட்டு ஒன்றை திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் பிரேசர்ஸ் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

எவரஸ்ட் சிகரத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான 477 புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.

இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த போது எவரஸ்ட் சிகரத்தை சுற்றி வட்டமிட்ட பறக்கும் தட்டு ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில் “ஏரியா-51” என்ற பகுதியிலேயே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியை ஆய்வு செய்வதற்காக அடிக்கடி இவ்வாறான மர்மப்பொருட்கள் வந்து செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த புகைப்படத்தை எடுத்த டேவிட் பிரேசர்ஸ் “இது உலங்குவானூர்தி அல்ல. இது ஒரு பறக்கும் தட்டு” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.