கொட்டிக் கிடக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்! அமெரிக்கா போட்டுள்ள திட்டம்

Report Print Sujitha Sri in விஞ்ஞானம்

நிலவில் பல்வேறு உலோகங்களும், பொக்கிஷங்களும் இருக்கின்றன. இது அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தெரிந்த விடயம்.

இந்த நிலையில் அந்த உலோங்களை அபகரிக்க அமெரிக்கா திட்டமிடுவது அம்பலமாகியுள்ளது. நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்று உலகிற்கு முதன் முதலில் கண்டுபிடித்துக் கூறியது இந்தியா.

அதாவது இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோவின் சந்திராயன் திட்டம் மூலம் இது தெரியவந்தது. இதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் உறுதி செய்தது.

சந்திராயன் - 1 செயற்கைக்கோள் அனுப்பிய தகவல் உண்மை என்பதையும் அங்கு தண்ணீர் உறைநிலையில் இருப்பதையும் படங்கள் தெளிவாகக் காட்டின.

சந்திரயான் - 2 திட்டம் சுமார் 95% வெற்றியாகும். ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, நிலவில் இருந்து 2.1 கி.மீ முன்பாக திடீரென வேகமாக தரையிறங்கியது.

லேண்டரை இதை சந்திராயன் - 2 ஓபிட்டர் கண்டுபிடித்துக் கூறியது. அசைவற்ற நிலையில் இருக்கும் லேண்டரின் ரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம் காட்டி வருகின்றது.

சந்திரயான் - 2 விக்ரம் லேண்டரை உயிர்ப்பிக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மையத்தில் இருந்து நாசா அதிர்வெண்ணை செலுத்தியிருக்கின்றது.

இதில் இருந்து சந்திரனில் இருந்து பிரபதிப்பாக சில 'சிக்னல்' மட்டும் வந்துள்ளது. நாசா ஏன் இந்த விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்று சந்தேகம் வருகிறது.

நிலவில் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முயன்று வருகின்றது. இதற்காக நாசா இஸ்ரோவின் திட்டத்தை பயன்படுத்தி காய்நகர்த்துகின்றது.

உதவி செய்து தகவல்களையும் அபகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றது. நிலவிலுள்ள எரிமைலை பாறைகளில் உள்ள கந்தகம் (sulphur), நிலவு உட்புறத்தில் இரும்பு சல்பைட்கள் (iron sulphide) உள்ளிட்டவை நிலவின் விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகும்.

எரிமலை வாலா குழம்பு உருவான போது இது உருவாகியிருக்காலம் என்று ஆய்வாளர் ப்ரென்னான் கூறுகிறார். பல்வேறு தனிமங்களும் உலோகங்களும் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

நிலவின் ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதால், சந்திரயான் - 2 திட்டம் நிலவின் தென் துருவத்தை தரையிறங்க தெரிவு செய்திருந்துது சரியானதாகவும் இருக்கின்றது.

நாசாவும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி மண் மாதிரிகளையும், பாறை துகள்களையும் சேரிக்க திட்டமிட்டுள்ளது. நிலவு உருவான உடனே அது விண்வெளியில் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும்.

இதனால் சைடரோபைல் தாதுக்கள் சூரிய மண்டலத்தின் எச்சங்களில் இருந்து வந்திருக்கும். இதனால் பல்வேறு தாதுக்கள், உலோகங்களும் அங்கு பொதிந்து கிடக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பி வருகின்றனர்.

இதற்காக மனிதர்களை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி, அங்குள்ள பாறைகள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்து, அதில் உள்ள உலோகங்கள், தனிமங்கள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது நாசா.

இதுபோன்ற நிலவில் ஏராளமான விஷயங்கள் இருப்பது குறித்து நாசாவுக்கு தெரியும். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உலோகங்கள் நிறைய இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் கொஞ்சம் கூட இந்த விஷயத்தில் இந்தியா நுழையும் என்று நாசா நினைக்கவில்லை. சந்திரயான் - 2 இற்கு உதவி செய்வதுடன், தகவல்களையும் பெற்றுக் கொள்ள நாசா முண்டியடித்துள்ளது.

உலோகங்களை பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பி அங்குள்ள மண் மாதிரி, பாறை துகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்காக தென் துருவத்தை தெரிவு செய்துள்ளது என அரச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.