2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று தென்படும்! இலங்கையிலும் அவதானிக்கலாம்

Report Print Ajith Ajith in விஞ்ஞானம்

2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகணத்தை இலங்கையில் அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 10.37 இற்கு ஆரம்பிக்கும் இந்த சந்திரக்கிரகணம் நாளை அதிகாலை 2.42 வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது முழுமையான கிரகணம் அதிகாலை 12.40 இற்கு நிகழும் என தெரியவருகிறது.

ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக், அத்லாந்திக், அமெரிக்கா, கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா, இந்து சமுத்திரம் மற்றும் ஆட்டிக் வட்ட திசைகளில் தென்படும் என்றும் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.