வாகன விபத்தில் சிக்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Suman Suman in பாதுகாப்பு

கிளிநொச்சி இந்துபுரம் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தை சேர்ந்த 28 வயதான இளைஞனே விபத்தில் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments