இளம் பெண்ணை கொலை செய்து புதைத்த சக ஊழியன்!

Report Print Kumutha Kumutha in பாதுகாப்பு

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று எஹெளியகொட பலீகல பிரதேசத்தின் வீட்டுத்தோட்டம் ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எஹெளியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

எஹெளியகொட பலீகல பிரதேசத்தின் வீட்டுத்தோட்டம் ஒன்றில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு குறித்த தோட்ட உரிமையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது,

உயிரிழந்த பெண் ஆடைத் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் இவர் எத்தேலதெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், எஹெளியகொட பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த தொழிற்சாலையில் தொழில் புரியும் ஆண் ஒருவருடன் ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ள நிலையில் இருவரும் திருமணம் முடித்திருக்க வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இருப்பதாகவும். குறித்த இருவருக்கும் இடையில் தினமும் சண்டை சச்சரவு காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த யுவதி கொலைசெய்யப்பட்ட விடயத்தை முதலில் அவருடன் தங்கியிருந்த இளைஞனின் உறவினர்களே அறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Comments