போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்காவிடம் வாய்திறந்த கோத்தபாய!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையில் போரின்போது படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் குழு ஒன்றை அமைக்கமுடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி,

கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் தூதுவராக இருந்த பெற்றீசியா பியூட்டினஸ், கோத்தபாயவை 2009 ஒக்டோபர் 7ஆம் திகதியன்று சந்தித்தபோது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை இந்தக்குழு, ஒம்புட்ஸ்மன் போன்ற அதிகாரத்தை கொண்டிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே போரின்போது தனிப்பட்ட இராணுவ வீரர்கள் மேற்கொண்ட திருட்டு, பாலியல் பலாத்காரம், கொலைகள் தொடர்பில், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு பல இராணுவ வீரர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கோத்தபாய, பியூட்டினஸிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை இராணுவ சட்ட திணைக்களத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பீரிஸிடம் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டிருக்கின்றார்.

Comments