கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உட்பட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பல் காலி துறைமுகத்தில் இயங்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு எதிராகவும் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நிறுவனத்திற்கு ரூபா 11.4 பில்லியன் இலாபம் ஈட்டித்தந்துள்ளார்கள் என்றும் இதனால் அரசாங்கத்திற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments