பூனேயில் இலங்கையர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை பொதுமகன் ஒருவர் பூனே விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சுதன் சுப்பையா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவலின்படி பிராங்போட் புறப்படும் விமானத்தில் ஏற முயற்சித்தபோது கிடைத்த முக்கிய தகவலின்பேரிலேயே அவர் தடுக்கப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணையின்போது தாம் விடுதலைப்புலிகளுக்காக பணியாற்றியதாக குறிப்பிட்ட அவர், போலி கடவுச்சீட்டையே தாம் கொண்டிருந்தமையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தமது உண்மையான பெயர் மாரிமுத்துராஜூ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பூனே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments