இங்கிலாந்தில் சட்டத்தை மீறிய இலங்கையருக்கு 14 மாத சிறைத்தண்டனை!

Report Print Ramya in பாதுகாப்பு

போலி கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு வேலைக்கு விண்ணப்பித்த இலங்கை பிரஜைக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து மாணவர் விசாவிலேயே அவர் இங்கிலாந்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கைது செய்யப்பட்டுள்ள 29 வயதுடைய சந்தேக நபர் விசா காலாவதியாகியதை அடுத்து போலியான இத்தாலி அடையாள அட்டையை அவர் வசம் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்துள்ளதாகவும் அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது போலி கடவுச் சீட்டு மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மூன்று முறையற்ற ஆவணங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரை Isleworth Crown நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தன்னுடைய குற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே அவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும், அவருடைய சிறைதண்டனை நிறைவடைந்த பின் உடனடியாக நாடு கடத்துமாறும் Isleworth Crown நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் குடிவரவு சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் என்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Latest Offers

Comments