சட்டமா அதிபரின் தாமதத்தால் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பொலிஸார் கடந்த 20 ஆண்டுகளில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரி சுமார் 19 ஆயிரத்து 500 விசாரணைகளை அனுப்பியுள்ளனர்.

இதனால், பொலிஸ் விசாரணை அறிக்கைகள் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து கடந்த 18 மாதங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி அனுப்பிய விசாரணை அறிக்கைகளும் இந்த குவியலுடன் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைகளின் தாமதம் காரணமாக சந்தேக நபர்கள் இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

உதாரணமாக தமிழ் மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்படும் கடற்படை அதிகாரிகள் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கடற்படையின் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய யாழ், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு மற்றும் விமல் வீரவங்ச மற்றும் சசி வீரவங்ச ஆகியோரின் வழக்கு அறிக்கைகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளதால் விசாரணைகள் தாமதமாகி வருகின்றன.

Comments