மகிந்த ராஜபக்ச சந்திக்கவிருந்த தேரர் மீது தாக்குதல்

Report Print Kumutha Kumutha in பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வழிபாட்டிற்காக செல்லவிருந்த மலேசிய விகாரை ஒன்றின் தேரர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மஹிந்த நாளைய தினம் செல்வதற்கு திட்டமிட்டமிட்டிருந்த விகாரை ஒன்றின் தேரர் மீது இன்றைய தினம் சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இச்சுற்றுப்பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் மஹிந்தவுடன் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த தாக்குதல் குறித்து ப்ரீ மலேசியா டுடே இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மலேசிய விஜயத்தை முன்னிட்டு அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்த மாநாடு நடைபெற்ற புத்ரா உலக வர்த்தக மையத்துக்கு முன்னால், நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 50பேர் வரை, செந்துல் கோயிலுக்குள் புகுந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, குறித்த கோயிலுக்குள் சென்றுள்ளார் என்ற தகவலை அடுத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு சென்றனர்.

இதன்போது ராஜபக்ச குறித்த கோயிலுக்கு வந்தாரா? என்று தெரிந்துக்கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கோயிலின் பிரதமக்குழு ஸ்ரீ சரணனிடம் கேள்வி எழுப்பியபோது சிலர் அவரைத்தாக்கியுள்ளனர்.

எனினும் பொலிஸார் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கருத்துரைத்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒருவர், கொலைகாரர்களை விஹாரைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை விடுக்கவே குறித்த விஹாரைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

Comments