போதைப் பொருள் கடத்தலில் திரைப்படப் பாணியையும் மிஞ்சி அதிகாரிகளை அதிர வைத்த இலங்கைப் பெண்!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

திரைப்படங்களில் போதைப் பொருட்களை கடத்திச் செல்வது போல இலங்கைப் பெண் ஒருவர் தமிழ் நாட்டிற்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருதாவது,

இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திருந்த பெண் ஒருவரை பரிசோதனை செய்த வேளை அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

திரைப்படங்களில் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு பல்வேறு முறைகளைப் பின்பற்றுவார்கள். அதனைப் பின்பற்றியே குறித்த பெண்ணும் செயற்பட்டிருக்கின்றார்.

சென்னை விமான நிலைய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் வயிற்றில் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அப் பெண் கடத்தி வந்த போதைப் பொருளானது இந்திய ரூபாயில் சுமார் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகாரிகளின் சோதனையின் போது அப் பெண் கூட்டுக்குளிகை (CAPSULES) வடிவில் விழுங்கியிருப்பது தெரியவந்தது.

உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் அந்த குளிகைகளை எடுப்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments