வீரவன்சவின் செயலாளர் விஷம் அருந்தியது ஏன்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு தேவையாகியுள்ள விமல் வீரவன்சவின் இணைப்பு செயலாளரான “மொரட்டு சனத்” எனப்படும் சனத் குமார என்பவர் தற்கொலைக்கு முயற்றுள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி விஷம் அருந்திய நிலையில், களுபோவில வைத்தியசாலையின் 33ஆம் வாட்டில் அனுமதிக்கப்பட்டு சனத் குமார சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த மொரட்டுவ சனத் என்பவர் யார்? அவர் ஏன் விஷம் அருந்தினார் என்பது தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவரால் நடத்தி செல்லப்பட்ட வர்த்தகம் நாளுக்கு நாள் வங்குரோத்து நிலையடைந்தமை, அதற்கு அவசியமான நிதி இல்லாமையினால் வங்கிகள் மற்றும் நபர்களுக்கும் வழங்க வேண்டிய வட்டி பணத்தை வழங்குவதற்காக பாரிய அளவில் கடன் பெற்றமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுவ சனத் தனது வர்த்தகத்தை ராஜபக்ச ஆட்சியில் விமல் வீரவன்சவின் அமைச்சில் இணைப்பு செயலாளராக செயற்பட்ட சந்தர்ப்பங்களிலேயே மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வந்துள்ளார். எனினும் ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் மொரட்டுவ சனத்தின் வர்த்தகம் நாளுக்கு நாள் வங்குகோரத்தடைந்துள்ளது.

மொரட்டுவ சனத் என்பவர் மாத்தறை பிரதேசத்தில் பிறந்த ஒருவராகும். அவர் விமல் வீரவன்சவை சந்திப்பதற்கு முன்னர் தொழில் தேடி கொழும்பிற்கு வந்து முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டுள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் மொரட்டுவ பகுதியில் சலூன் ஒன்றையும் நடத்தி சென்றுள்ளார்.

சனத் குமார எப்போதும் விரைவாக பணம் சம்பாதிக்கும் வழியை தேடிக் கொண்டிருந்த ஒருவராகும். இந்த நிலையில் தனது முடி வெட்டும் வர்த்தகத்தின் ஊடாகவே விமல் வீரவன்சவை அவர் சந்தித்துள்ளார். பின்னர் சிறந்த மற்றும் உயர் ரக மது பானங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடிக்கடி விமல் வீரவன்சவை சந்திக்க சென்றுள்ள நிலையில் பணம் சம்பாதிக்கும் வர்த்தகம் தொடர்பில் அவர் நீண்ட நேரம் விமல் வீரவன்சவுடன் உரையாடல் மேற்கொண்டு வந்துள்ளார்.

விரைவாக பணம் சம்பாதிக்கும் சனத்தின் விருப்பத்தை புரிந்துக் கொண்ட விமல், தனது பண வங்கியை நிரப்பிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மிகவும் நுட்பமாக சனத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

சனத்தின் அவசியம் மற்றும் விமலின் அவசியம் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போனமையினால் இருவரும் சிறந்த நண்பர்களாகியுள்ளனர்.

பின்னர் விமல் தனது நம்பிக்கையை உறுதி செய்துக் கொண்டு சனத் குமாரவை தனது இணைப்பு செயலாளராக நியமிப்பு வழங்கியுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு அமைச்சரவை அமைச்சு பதவி கிடைத்த பின்னர் சனத் குமாரவை தனது அமைச்சின் இணைப்பு செயலாளராக நியமித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Latest Offers

loading...

Comments