மகிந்தானந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Report Print Ramya in பாதுகாப்பு

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதேவேளை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் ஆலோசகர் அஜித் நிசாந்தவிற்கு எதிராகவும் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ரூபா 53.3 மில்லியன் ரூபாவினை மோசடி செய்த குற்றத்திற்கே இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் இந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments