குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை! கொட்டஹேன பகுதியில் பெரும் பரபரப்பு

Report Print Murali Murali in பாதுகாப்பு
309Shares

கொழும்பு கொட்டஹேன அதிக மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இதன் போது தனியார் திரையரங்கு ஒன்றினுள் நுழைய முற்பட்ட யானை, பின்னர் பாதுகாப்பு கடவையை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் யானைப் பாகன் ஆகியோர் இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரஹரா சென்ற யானை ஒன்றே இவ்வாறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதி சற்று நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments