சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது!

Report Print Kumutha Kumutha in பாதுகாப்பு

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல்நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பொரளை பகுதியில் வைத்து சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்தே இந்த விடயம் குறித்து அவதானம்செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களைமேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் ஆணையாளர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகளுக்குள் அதி கூடிய பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளுக்கு வெளியே சிறைச்சாலை அதிகாரிகள் பலபிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நிலைமையினை மாற்றுவதற்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தேவையானபாதுகாப்பை வழங்குவதற்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...

Comments