யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? மீண்டும் யுத்தம் தலை தூக்குமா?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? மீண்டும் யுத்தம் தலை தூக்குமா?
268Shares

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்கின் சிலர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மீளவும் நாட்டில் போர் இடம்பெறக்கூடும் என பிரச்சாரம் செய்து படையினரின் மனோதிடத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.

உண்மையில் இவ்வாறான ஓர் நிலைமை யாழ்ப்பாணத்தில் கிடையாது. யாழ்ப்பாணத்தில் எவ்வித குழப்ப நிலைமைகளும் கிடையாது.

விவாதம் எதுவுமின்றி சில தரப்பினர் அரசியல் லாபமீட்ட இவ்வாறு போலிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சி நடத்தினாலும் அது படையினரை பாதிக்காது.

ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் குழப்பங்கள் கிளர்ச்சிகள் ஏற்பட்டால் அதனை முறியடிப்பதற்கு சகலவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Comments