இலங்கை துறைமுக தலைவராக செயற்பட்ட பிரியாத் பந்து விக்ரம மற்றும் வர்த்தகர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்பட கூடும் என பாதுகாப்பு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த அனைவரும் ராஜபக்ச ரெஜிமென்டின் ஆட்சியின் போது பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும்.
அந்த காலங்களில் பிரியாத் பந்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்த முடியாமையே அவர் கைது செய்யப்படுவதற்கான பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வங்கி நிதி நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் காணி பதிவு அலுவலகம் உட்பட 81 நிறுவனங்களில் பெற்றுக் கொண்ட தகவல்களுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் குறித்த விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படலாம் என கூறப்படுகின்றது.
பிரியாத் பந்து பதவியில் செயற்படும் போது பல்வேறு இயக்குநர் அலுவலகத்திற்கு ஊழியர்களை விடுவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.