அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனம்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் பற்றி விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை உருவாக்கும் யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த யோசனை ஏற்கனவே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அநீதிகள், அசௌகரியங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தின் ஊடாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மோசடிகளை கட்டப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments