முல்லைத்தீவு கடற்கரையில் மர்மப்பொருள்!.C4 வெடிமருந்து என்று சந்தேகம்?

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவு நகரின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலஇன்று காலை நடைபெற்றுள்ளது.

குறித்த நடவடிக்கையின் போது கடற்கரை மண்ணுள் புதைந்து கிடந்த பசளை பை ஒன்று மாணவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மர்மப்பொருள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயரிக்கும் C4 வெடிமருந்தின் தோற்றத்தில் காணப்பட்டதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் சாதாரண உடையில் சேவை செய்து கொண்டிருந்த பொலிஸ்அதிகாரிகள் உடனடியாக மர்மப்பொருள் தொடர்பாக ஆராய்துள்ளனர்.

எனினும் குறித்த மர்மப்பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் கழிவுப்பொருட்களுடன் அவற்றை அகற்றாமல் மேலதிக ஆராயும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொலிஸர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Latest Offers

loading...

Comments