20 லட்சம் ரூபா நிதி திரட்டும் நடவடிக்கை பூர்த்தி!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கி, தண்டனையிலிருந்து மீள்வதற்கு திரட்டப்பட வேண்டிய 20 லட்சம் ரூபாவினை மேஜர் விமல் விக்ரமகேவின் சார்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த போது சுட்டுக்கொலை செய்தமைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 20 லட்சம் வழங்குமாறு ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமகேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றதற்காக ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் குடும்ப உறுப்பினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

மேஜர் விக்ரமகே, குறித்த காலத்திற்குள் நட்ட ஈட்டை செலுத்த தவறினால் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

நாட்டுக்காக அர்ப்பணிப்புச் செய்த படைவீரரை தண்டனையிலிருந்து மீட்கும் நோக்கில் நிதி திரட்டப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் குறுகிய காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டின் சில பகுதிகளுக்கு சென்று தேவையான 20 லட்சம் ரூபாவினை திரட்டியுள்ளனர்.

திரட்டப்பட்ட நிதி எதிர்வரும் 29ம் திகதி பெபிலியான சுனேத்திராதேவி பிரிவெனயில் வைத்து மேஜர் விக்ரமகேவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் வைத்து நிதி திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதி திரட்டும் பணிகளுக்கு ஊடகங்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் வேறும் வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments