மகிந்த காலத்து மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை செய்ய கோரிக்கை

Report Print Kumutha Kumutha in பாதுகாப்பு

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கப்ரால் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கியில் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ள நிதி கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடிதம் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments