முடிவுக்கு வந்த சோதனை நடவடிக்கை - பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

Report Print Suthanthiran Suthanthiran in பாதுகாப்பு

யாழ். தெல்லிப்பளை - குரும்பசிட்டி பகுதியில் கிணறு ஒன்றில் வெடிபொருட்கள் காணப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை இன்றுடன் முடிந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நடத்தப்பட்ட சோதனைகளில் 177 அபாயகரமான வெடி பொருட்கள் மற்றும் 1600 துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மேலும் கூறுகையில்,

குரும்பசிட்டி J 242 கிராமசேவகர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் மக்கள் கிணறு ஒன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது வெடிபொருட்கள் இருப்பதை கண்ட மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து விசேட அதிரடிப்படை குறித்த கிணற்றை சோதனை செய்தது.

இதன்போது 1600 துப்பாக்கி ரவைகள், 53 ஆர்.பி.ஜி குண்டுகள், 2 ஆட்லறி ஷெல்கள், 40mm டொங்கான் குண்டுகள் 79, 81mm மோட்டார் எறிகணைகள் 7, 60mm மோட்டார் எறிகணைகள் 29, மோட்டார் பரா 07, மற்றும் பிறப்பளர்கள், பியூஸ்கள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் நீதிமன்ற அனுமதியுடன் அழிக்கப்படவுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments