யாழில் புலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாளை கைதாகுவர்!

Report Print Samy in பாதுகாப்பு
325Shares

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நலிந்த ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் உதவியுடன், விசாரணைகளை முன்னெடுத்த 5 சிறப்புக் குழுக்களே மேற்படி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையின் சிறப்பு விசாரணைக் குழு ஊடாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் அவர்களுக்கு மேற்படி பொலிசார் மீதான தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோரையும் கைது செய்ய திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Comments