படைவீரா்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதம் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, காணாமல் போனோர் சட்டம் ஊடாக படைவீரர்களுக்கு ஏற்படக்கூடிய கடுமையான அழுத்தங்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு போன்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் கடற்படைத் தளபதிகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையை ஜனாதிபதி கண்டித்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.