யாழ்.கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை கூடு மீட்பு!

Report Print Suthanthiran Suthanthiran in பாதுகாப்பு
762Shares

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்குமுன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையதடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது துப்பாக்கி ரவைக் கூடுஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments