வடக்கில் விஷேட அதிரடிப்படையினர் குவிப்பு...! யாழ். உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு கெடுபிடி

Report Print Murali Murali in பாதுகாப்பு
924Shares

அண்மையில், சுன்னாகத்தில் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியிருந்தது.

இந்நிலையில், வட மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் விஷேட அதிரடிப்படைப் பிரிவுகளும், பொலிஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுன்னாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதேவேளை, ஆவா குழுவைக் கண்டறிவதிலும் விஷேட அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில், விஷேட அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments