மட்டக்குளி கொலைச் சம்பவம்! உயிரிழந்தவர்கள் ஹிருணிக்காவின் சகாக்களா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
259Shares

மட்டக்குளி - சமித்புர பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நால்வரின் அரசியல் தொடர்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாதாள உலக குழுக்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக நால்வர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இருவர் படுகாயம் அடைந்து அவசர சிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் உயிரிழந்த நால்வரும் சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கி தொடர்பு வைத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னாள் அரச தலைவரின் மகனுடன் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரச தலைவரின் மகனுக்கு, குறித்த சந்தேகநபர்கள் பல உதவிகளை செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் அவருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இவர்களினாலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமசந்திர அண்மைக்காலமாக அடியாட்கள் சகிதம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments