மரண தண்டனை கைதியின் தொலைபேசி பாவனை! சர்ச்சையில் சிறைச்சாலை நிர்வாகம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
384Shares

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்த, சிறைச்சாலைக்குள் தொலைபேசி பயன்படுத்தியமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட தெமட்டகொட சமிந்த எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், தொலைப்பேசி ஊடாக இந்த புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் வெளியாகியதனை தொடர்ந்து, விளக்கமறியலினுள் அவருக்கு தொலைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி தெமட்டகொட சமிந்த தனது பேஸ்புக் பக்கத்தை சிறைச்சாலையில் இருந்து இயக்குவதாக அறிவித்திருந்தேன்.

இந்த நிலையில் பிரதான இணையத்தளம் ஒன்று இன்று சிறைச்சாலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

அப்போது நான் வெளியிட்ட பதிவுக்கு பலர் விசனம் தெரிவித்தனர். ஆனால் அதற்கான பதில் இன்று கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Comments