ஜெனிவாவில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இலங்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
283Shares

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் நெருக்கடி ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சித்திரவதைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் குழுவின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. ஜெனிவா நகரில் கூடும் சித்திரவதைக்கு எதிரான குழுவின் பரிந்துரை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

குழுவின் ஆய்வு அமர்வில் கலந்துக் கொண்ட இலங்கையின் புலனாய்வு பிரிவு பிரதானி, அந்த குழுவினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தவறிய நிலையில், இலங்கையில் எந்தவொரு பிரதிநிதியும் அவருக்காக முன்னிலையாகவில்லை.

புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மென்டிஸிடம் வினவப்படும் கேள்விகளுக்கு கடிதம் மூலம் பதிலளிப்பதற்கு அந்த குழுவினால் இலங்கை அரசாங்கத்திற்கு 48 மணி நேரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சித்திரவதையை தடுப்பதற்காக கொண்டு வந்துள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய அறிக்கை, சித்திரவதைக்கு எதிராக குழு திருப்தியடையவில்லை என தெரியவந்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடு குழுவின் உப தலைவர் பெலீஸ் கெயரினால் யுத்தத்தின் இறுதியில் பொலிஸ் விசாரணை பிரிவு ஒன்றினால், வடக்கில் மேற்கொண்ட சித்திரவதை தொடர்பில் புலனாய்வு பிரிவு பிரதானியிடம் கடுமையாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு இலங்கை பிரதிநிதி பதிலளிக்க தவறியுள்ளார்.

சித்திரவதைகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவற்றிக்கு தொடர்பு என குற்றம் சுமத்தப்படுகின்ற குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்டவர் சிசிர மென்டிஸ் எனவும், அவரிடம் பதில் எதிர்பார்ப்பதாகவும், அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சிவில் அமைப்பு மற்றும் சுயாதீன ஊடக அமைப்பினால் சிசிர மென்டிஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

Comments