பொலிஸ் மா அதிபரின் வித்தியாசமான கோரிக்கை

Report Print Steephen Steephen in பாதுகாப்பு
192Shares

வீதியில் பயணித்து கொண்டிருக்கும் வாகனம் ஒன்றை ஏதேனும் ஒரு காரணத்திற்காக நிறுவனத்தினால், அந்த பணி முடிந்த பின்னர், “கவனமாக சென்று வாருங்கள்” என்ற வார்த்தை பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேசும் போது ஏற்படும் பிரச்சினைகளை காரணமாக கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சட்டத்தை அமுல்படுத்தும் போது சகல பொலிஸ் அதிகாரிகளும் மனிதாபிமாக தெளிவான வார்த்தைகளை பயன்படுத்தி கௌரவமான முறையில் பொதுமக்களிடம் உரையாட வேண்டும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

தாழ்மையாகவும் மனிதாபிமானத்துடன் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் தனிப்பட்ட நட்புக்கு அடிப்பணியாது, எந்த அழுத்தங்களுக்கும் பணியாது சகல அதிகாரிகளும் சேவையாற்ற வேண்டும் எனவும் பூஜித் ஜயசுந்தர இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Comments