44 லட்சம் ரூபா பெறுமதியான காரை கடத்திய மர்மநபர்கள்!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
100Shares

44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகளுடன் கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி விற்பனை பிரதிநிதியொருவரின் வாகனமே கடத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நான்கு பேர் கடத்தியுள்ளனர்.

44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகள் மற்றும் 7 லட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை கடத்தி வாகன குறித்த விற்பனைப் பிரதிநிதியை கொலன்னாவ பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments