மஹிந்தவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
551Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வழங்கி வந்த 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் இவ்வாறு 12 உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ இதுவரையில் எவ்வித பதிலையும் வெளியிடவில்லை.

Comments