காலில் விழுந்த இராணுவத்தினரை தடுத்து நிறுத்திய மைத்திரி! நெகிழ்ச்சியில் அதிகாரிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
1363Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுவதற்கு முயற்சித்த பாதுகாப்பு பிரிவினரை தடுத்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு ஜனாதிபதி மத வழிப்பாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை கொழும்பிற்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வெற்றிலையுடன் ஜனாதிபதியின் காலில் விழுவதற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவர் சீருடையுடன் மைத்திரிகாலில் விழுவதற்கு வெற்றிலையுடன் வருகை தந்துள்ளனர்.

தூரத்தில் குறித்த அதிகாரிகள் வருவதை கண்ட ஜனாதிபதி தன்னை வணங்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். வெற்றிலை கொண்டு வந்தால் பரவாயில்லை. சீருடை அணிந்து என் காலில் விழ வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ சீருடையில் யாருக்காவும் குனிய வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Comments