மாத்தறையில் பிரான்ஸ் பிரஜை கைது

Report Print Ramya in பாதுகாப்பு

மாத்தறை பொல்ஹென்ன பகுதியில் வைத்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை விதிக்கப்பட்டிருந்த 6.72 கிராம் போதைப்பொருளை குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments