நிதி மோசடி விசாரணை பிரிவு அலுவலகத்தின் முன்பாக சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விமல் வீரவன்ச இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்ப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிபப்தற்காகவே வருகை தந்துள்ள நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்சவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடடிவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.