வீரவன்சவை காப்பாற்ற களமிறங்கப்பட்ட பெண்கள்! ஆதாரம் அம்பலம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகளினால் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார்.

அங்கு விமல் வீரவன்சவுக்காக பாரிய சத்தத்ததுடன் பெண்கள் சிலர் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். எனினும் அந்த பெண்கள் வேன் ஒன்றில் அழைத்து வரப்பட்ட சம்பவம் சாட்சியுடன் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்கள் வேன் ஒன்றில் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது ஊடகங்களில் வைரலாகி வெளியாகியுள்ளது.Comments