பொலிஸாருக்கு எதிராக 400 முறைப்பாடுகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
37Shares

இலங்கை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை சித்திரவதை மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலானவைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை தவிர பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவு சித்திரவதைகளுக்கான இடம் என அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காம் மாடி என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வு பிரிவினுள் மேலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதற்கான பல சாட்சிகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments