தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக மானதுங்க பதவியேற்பு!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
44Shares

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக பீ.எச். மானதுங்க பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மானதுங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.பீ.எச் மானதுங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக இதுவரை காலமும் பேராசிரியர் சிறி ஹெட்டிகெ கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ள காரணத்தினால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது எனவும், உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிக்க விரும்புவதாகவும் அண்மையில் சிறி ஹெட்டிகே தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைவராக மானதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments